2வது இன்னிங்சில் 117 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்-2வது டெஸ்டில் வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் அலி உஸ்மான், சஜித் கான் 2வது இன்னிங்சில் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ali usman
Published on

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் 344 ரன்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 34 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடக்க வீரர் பிராண்டன் கிங் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 73 ரன்னும், ராஸ்டன் சேஸ் 70 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 4 விக்கெட்டும், முகமது அலி, உபைத் ஷா, அலி உஸ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆசான் அவிஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அப்துல்லா ஷபிக் சதம்

அடுத்து இறங்கிய பாபர் அசாம், அப்துல்லா ஷபிக்குடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்துல்லா ஷபிக் சதமடித்து அசத்தினார். பாபர் அசாம் அரை சதம் கடந்தார்.

இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 66 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷபிக் 107 ரன்னும், பாபர் அசாம் 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. 3வது விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் அசாம் 88 ரன்னில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து அப்துல்லா ஷபிக் 160 ரன்னில் வெளியேறினார். அதன்பின், மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் முன்னிலை பெற்றது.

வாரிகன் 6 விக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமெல் வாரிகன் 6 விக்கெட்டும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னின்ங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதிகபட்சமாக காவெம் ஹோட்ஜ் 34 ரன் எடுத்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அசத்தல் பந்துவீச்சு

பாகிஸ்தான் சார்பில் சஜித் கான், அலி உஸ்மான் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com