ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் வெற்றி பெற 134 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் வெற்றி பெற 134 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை
Published on

அபுதாபி:

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டம் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது பந்தில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.

பதும் நிசங்கா 8 ரன்னிலும், குசால் பெரேரா 15 ரன்னிலும், சரித் அசலங்கா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

இறுதியில், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com