செஞ்சுரியன் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 88/3

முதலில் ஆடிய பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
செஞ்சுரியன் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 88/3
Published on

செஞ்சுரியன்:

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 57.3 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கம்ரான் குலாம் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 28 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் பேட்டர்சன் 5 விக்கெட்டும், கார்பின் போஷ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் 89 ரன் எடுத்தார். கார்பின் போஷ் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டும், அமீர் ஜமால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

90 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. சயீம் அயூப் 27 ரன்னும், ஷான் மசூத் 28 ரன்னும், கம்ரான் குலாம் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், இரண்டாவது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com