சாம்பியன்ஸ் டிராபி: ஒரேயொரு பிரத்யேக ஸ்பின்னருடன் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் அணியில் 9 பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர்.பஹர் சமான் 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி: ஒரேயொரு பிரத்யேக ஸ்பின்னருடன் பாகிஸ்தான் அணி அறிவிப்பு
Published on

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது ரிஸ்வான் தலைமையிலான அணியில் அப்ரார் அகமது மட்டுமே பிரத்யேக ஸ்பின்னராக இடம் பிடித்துள்ளார். 9 பேட்ஸ்மேன்கள் இடம் பிடித்துள்ளனர். அப்ரார் அகமது 4 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி பிப்ரவரி 11-ந்தேதி வரைக்கும் அணியில் மாற்றம் செய்ய முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

ஆல்ரவுண்டர்கள் குஷ்தில் ஷா, பஹீம் அஷ்ரப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடக்க வீரர் பஹர் சமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார்.

பஹர் சமான் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக விளையாடினார். குஷ்தில் ஷா கடைசியாக 2022-ல் விளையாடினார். பஹீம் அஷ்ரப் 2023-ம் ஆண்டு 50 ஓவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுபியன் முகீம், பேட்ஸ்மேன் இர்பான் கான் நியாசி, தொடக்க பேட்ஸ்மேன் அப்துல்லா ஷபிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எங்கள் நாட்டில் தொடர் நடைபெற இருப்பதால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், சர்வதேச போட்டிகளில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் வகையில் அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினோம் என ஷபிக் தெரிவித்துள்ளார்.

பஹர் சமான் உடன் பாபர் அசாம் அல்லது ஷகீல் தொடக்க வீரராக களம் இறங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஹரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. முகமது ரிஸ்வான், 2. சல்மான அலி ஆகா (துணைக்கேப்டன்), 3. பாபர் அசாம், 4. பஹர் சமான், 5. ஷகீல், 6. கம்ரான் குலாம், 7. குஷ்தில் ஷா, 8. தய்யப் தாஹிர், 9. உஸ்மான் கான், 10. பஹீம் அஷ்ரப், 11. ஷாஹீன் ஷா அப்ரிடி, 12. நசீம் ஷா, 13. முகமது ஹஸ்னைன், 14. அப்ரார் அகமது.

பிப்ரவரி 8 முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முத்தரப்பு போட்டியில் இந்த அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19-ந்தேதி கராச்சி மைதானத்தில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com