டிஎன்பிஎல் 2024- டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சு தேர்வு

சேலத்தில் ஜூலை 11ம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.
டிஎன்பிஎல் 2024- டாஸ் வென்ற நெல்லை அணி பந்து வீச்சு தேர்வு
Published on

சேலம்:

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

சேலத்தில் ஜூலை 11-ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

இன்றைய முதல் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com