அஜிதேஷ் அதிரடி சதம் - கோவையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது நெல்லை

முதலில் ஆடிய கோவை அணி 181 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய நெல்லை அணி 182 ரன்களை எடுத்து வென்றது.
சதமடித்த அஜிதேஷ் குருசாமி
சதமடித்த அஜிதேஷ் குருசாமி
Published on

கோவை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சாய் சுதர்சன் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 90 ரன்கள் விளாசினார். சுரேஷ் குமார் 33 ரன்கள் சேர்த்தனர்.

நெல்லை அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் டக் அவுட்டானார்.

2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்ரீ நிரஞ்சன், அஜிதேஷ் குருசாமி 76 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரீ நிரஞ்சன் 25 ரன்னிலும், ரித்திக் ஈஸ்வரன் 3 ரன்னிலும், சோனு யாதவ் 20 ரன்னிலும், அருண்குமார் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.

அஜிதேஷ் குருசாமி தனி ஆளாகப் போராடி சதமடித்தார். அவர் 112 ரன்னில் ரன் அவுட்டானார்.

இறுதியில், நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்து திரில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com