ஓவர் த்ரோ இல்லை... ஒரு பந்தில் ஓடியே  5 ரன்கள் எடுத்த அயர்லாந்து வீரர்

ஓவர் த்ரோ இல்லை... ஒரு பந்தில் ஓடியே 5 ரன்கள் எடுத்த அயர்லாந்து வீரர்

ஜிம்பாப்வே அணி அயர்லாந்துடன் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இப்போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
Published on

பெல்பாஸ்ட்:

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதை தொடர்ந்து, 40 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 197 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வீரர் ஆண்டி மெக்ப்ரைன் ஒரே பந்தில் ஓடியே 5 ரன்கள் எடுத்துள்ளார்.

எந்த ஓவர் த்ரோவும் இல்லாமல் ஃபீல்டர் பவுண்டரில் லைனில் பந்தை தடுத்து வீசுவதற்குள் மெக்ப்ரைன் - லார்கன் ஜோடி ஓடியே 5 ரன்கள் எடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com