மீண்டும் விசா வழங்க மறுத்த அமெரிக்கா: டி20 உலகக் கோப்பையை மிஸ் செய்யும் நேபாள வீரர்

ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது புகார் எழுந்தது.தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
மீண்டும் விசா வழங்க மறுத்த அமெரிக்கா: டி20 உலகக் கோப்பையை மிஸ் செய்யும் நேபாள வீரர்
Published on

காத்மண்டு:

நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்தது. அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்தார்.

இந்நிலையில், நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனின் அமெரிக்க விசா விண்ணப்பம் 2-வது முறையாக நிராகரிக்கப்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com