சர்வதேச போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் ஓய்வு

பிசிசிஐ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு முரளி விஜய் நன்றி தெரிவித்தார்.கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.
சர்வதேச போட்டியில் இருந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் ஓய்வு
Published on

கிரிக்கெட் விளையாட்டில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடுபவர் இந்திய வீரர் முரளி விஜய். இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒருநாள் போட்டிகள், 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 38 வயதான முரளி விஜய், கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார்.

அதன்பின்னர் ரஞ்சிக்கோப்பையில் கவனம் செலுத்திய அவர் 2019-ம் ஆண்டு முதல் அதற்கும் முடிவு கட்டினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்தார். மேலும் பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com