ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி தம்பதிக்கு திருமண வாழ்த்து தெரிவித்த எம்.எஸ்.டோனி

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் நடைபெற்றது. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும்.
ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி தம்பதிக்கு திருமண வாழ்த்து தெரிவித்த எம்.எஸ்.டோனி
Published on

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

இந்நிலையில், ராதிகா மெர்ச்சண்ட் - ஆனந்த் அம்பானி தம்பதிக்கு இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், "ராதிகா, உங்கள் பிரகாசமான புன்னகை என்றும் மறையாது. ஆனந்த், உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் நீங்கள் காட்டும் அதே அன்புடனும் கருணையுடனும் ராதிகாவைத் தொடர்ந்து அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி, சிரிப்பு நிறைந்ததாக இருக்கட்டும். வாழ்த்துகள் விரைவில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com