டெஸ்டில் 434 விக்கெட்: கபில்தேவ் சாதனையை முறியடிப்பாரா ஸ்டார்க்?

மிட்செல் ஸ்டார்க் 105 டெஸ்டுகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
kapil dev, starc
Published on

வங்கதேச அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 13-ம் தேதி அங்குள்ள டார்வின் நகரில் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மிட்செல் ஸ்டார்க் 105 டெஸ்டுகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

கபில்தேவ் 131 டெஸ்டில் விளையாடி 434 விக்கெட் எடுத்து 11-வது இடத்தில் உள்ளார்.

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினால் கபில் தேவின் சாதனையை முறியடிப்பார் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் வார்னே 708 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், நாதன் லயன் 567 விக்கெட்டுடன் 2வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுடன் 3வது இடத்திலும் உள்ளனர். அந்த வரிசையில் 433 விக்கெட்டுகளுடன் மிட்செல் ஸ்டார்க் 4-வது இடத்தில் உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் மிட்செல் ஸ்டார்க் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 8 டெஸ்ட்களில் 46 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com