இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மார்க் வுட் விலகல்

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மார்க் வுட் விலகல்
Published on

லண்டன்:

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com