டிஎன்பிஎல் கிரிக்கெட் - தொடர் நாயகன் மற்றும் ஆரஞ்சு கேப் வென்றார் அஜிதேஷ்

டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது அஜிதேஷ் வென்றார். ஆட்ட நாயகன் விருது கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.
அஜிதேஷ் குருசாமி
அஜிதேஷ் குருசாமி
Published on

நெல்லை:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் ஆரஞ்சு கேப் விருதை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.

பர்பிள் கேப் விருது 17 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை அணி கேப்டன் ஷாருக் கானுக்கு அளிக்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது 4 விக்கெட் வீழ்த்திய கோவை அணியின் ஜத்வேத் சுப்ரமணியம் வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com