டிஎன்பிஎல் 2026: மதுரை வெற்றிபெற 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி

டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.
suresh kumar
Published on

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17- ந் தேதி ஓய்வு தினமாகும்.

முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கின்றன.

மதுரை பாந்தர்ஸ் பவுலிங்

இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 2வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடினர்.

சுரேஷ் குமார் அதிரடி

முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த நிலையில் ராஜ்குமார் 24 ரன்னில் அவுட்டானார். ஜெயராமன் சுரேஷ் குமார் 18 பந்தில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

ஜெகதீசன் கவுசிக், ஷியாம் சுந்தர் தலா 11 ரன்னில் வெளியேறினர். ஜாபர் ஜமால் 2 ரன்னில் அவுட்டானார். அந்த அணி 5 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்து திணறியது.

6-வது விக்கெட்டுக்கு சஞ்சய் யாதவ் உடன் ராஜ்குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 65 ரன் சேர்த்த நிலையில் ராஜ்குமார் 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. சஞ்சய் யாதவ் 37 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

மதுரை பாந்தர்ஸ் அணி சார்பில் ராஜலிங்கம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com