Lords Test | நியூசிலாந்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Lords Test | நியூசிலாந்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
லார்ட்ஸ் டெஸ்ட்
Published on

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 140

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. காலையில் மழை பெய்ததால் போட்டி சற்று காலதாமதமாக தொடங்கியது. சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 39.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 140 ரன்களில் சுருண்டது.

ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 56 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 113

பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்தையும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 19.2 ஓவரில் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அத்துடன் போதிய வெளிச்சம் இல்லாததால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் நியூசிலாந்து 113 ரன்களில் சுருண்டது. கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 226

27 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் இங்கிலாந்து தடுமாறியது. 226 ரன்களில் ஆல்அவுட் ஆனது, எமிலியோ கே 57 ரன்களும், ஜேமி ஸ்மித் 39 ரன்களும் சேர்த்தனர். நியூசிலாந்து அணியின் நாதன் ஸ்மித் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 254 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் பெரும் பகுதி மழையால் தடைபட்டது. நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுது்திருந்தது.

இங்கிலாந்து 115 ரன்களில் வெற்றி

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 138 ரன்களில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 44 ரன்களும், கான்வே 41 ரன்களும் சேர்த்தனர். கஸ் அட்கின்சன் 5 விக்கெட் வீழ்த்த்தினார்.இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com