சிக்சர் மழையால் குளிர்ந்த ஈடன் கார்டன் - சென்னை அணி 235 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.முதலில் ஆடிய சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.
சிக்சர் மழையால் குளிர்ந்த ஈடன் கார்டன் - சென்னை அணி 235 ரன்கள் குவிப்பு
Published on

கொல்கத்தா:

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 3 சிக்சர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய கான்வே மீண்டும் அரை சதமடித்து அசத்தினார். அவர் 40 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 56 ரன்கள் குவித்தார்.

அடுத்து இறங்கிய ரகானே, ஷிவம் டூபே ஜோடியும் ஈடன் கார்டன் மைதானத்தில் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டது. ஷிவம் டூபே 21 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 18 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. ரகானே 71 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com