டெஸ்ட்டில் 300 ரன்கள் குவித்த கருண் நாயருக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.டெஸ்ட்டில் கருண் நாயரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும்.
டெஸ்ட்டில் 300 ரன்கள் குவித்த கருண் நாயருக்கு 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம்
Published on

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தேர்வு செய்தது.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை இன்று அறிவித்துள்ளது.

அந்த வகையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, கருண் நாயர் இடம் பிடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக 2017-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

டெஸ்ட்டில் 6 போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும். இதனை இங்கிலாந்து எதிராக அவர் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com