அறிமுக போட்டியில் அதிவேக சதம் விளாசிய 2-வது வீரராக ஜோஷ் இங்கிலிஸ் சாதனை- முதலிடத்தில் இந்திய வீரர்

இலங்கைக்கு எதிராக அறிமுக போட்டியிலேயே ஜோஷ் இங்கிலிஸ் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.டெஸ்ட்டில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் உள்ளார்.
அறிமுக போட்டியில் அதிவேக சதம் விளாசிய 2-வது வீரராக ஜோஷ் இங்கிலிஸ் சாதனை- முதலிடத்தில் இந்திய வீரர்
Published on

காலே:

இலங்கை- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி கவாஜா 232, ஸ்மித் 141, ஜோஷ் இங்கிலிஸ் 102 ஆகியோர் உதவியுடன் 654 குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, வேண்டர்சே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த போட்டியில் அறிமுகமான ஜோஷ் இங்கிலிஸ், அதிரடியாக விளையாடி 102 (94) சதம் அடித்தார். இதன்மூலம் டெஸ்ட்டில் அதிரடி சதம் விளாசிய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் ஷிகர் தவான் உள்ளார்.

2013-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 85 பந்துகளில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார். 3-வது 4-வது இடங்கள் முறையே ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) 93 பந்துகளிலும் ப்ரித்வி ஷா (இந்தியா) 99 பந்துகளிலும் சதம் விளாசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com