இந்திய அணியின் அடுத்த பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்?

இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் அடுத்த பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்?
Published on

மும்பை:

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதில் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது.

குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அரசியலில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், கேகேஆர் அணியின் ஆலோசகராக பணியாற்றி முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்புக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் பணியாற்றிய போது, அதே லக்னோ அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஜான்டி ரோட்ஸ்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் பீல்டிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். இதனால் கவுதம் கம்பீர் குழுவில் ஜான்டி ரோட்ஸ் இடம்பெறுவதற்காக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com