ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: முதல் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் 284/2

இறுதிப்போட்டியில் ஜம்மு காஷ்மீரும், கர்நாடக அணிகளும் மோதின.டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: முதல் நாள் முடிவில் ஜம்மு காஷ்மீர் 284/2
Published on

ஹூப்ளி:

ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இறுதிப்போட்டி கர்நாடகாவின் ஹூபளியில் நேற்று தொடங்கியது. இதில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் யாவர் ஹசன் 88 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய ஷுபம் பண்டி சதமடித்து 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அப்துல் சமது அரை சதம் கடந்து 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com