ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து மனம் திறந்து பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார்.இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை.
ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது குறித்து மனம் திறந்து பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்
Published on

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார். ஆண்டர்சன் டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது தொடர்பாக சம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், "தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதனால்தான் ஐபிஎல் ஏலத்தில் நான் பதிவு செய்துள்ளேன். நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் ஐபிஎல் ஏலத்திற்கு காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com