சங்ககாரா எனது பேட்டை பயன்படுத்துகிறார்- சாம்சன் நெகிழ்ச்சி பதிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார். அவர் இலங்கையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் பேட்டை வைத்து விளையாடி இருக்கிறார்.
சங்ககாரா எனது பேட்டை பயன்படுத்துகிறார்- சாம்சன் நெகிழ்ச்சி பதிவு
Published on

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார். அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இலங்கையில் கிராம கிரிக்கெட்டில் சங்கக்காரா விளையாடும் போது சஞ்சு சாம்சனின் பேட்டை வைத்து விளையாடி உள்ளார். அதில் சங்கக்காரா இங்கிலாந்தில் சில கிராம கிரிக்கெட் விளையாட சாம்சனின் பேட்களைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

இதன் புகைப்படத்தை சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குமார் சங்கக்கார என் பேட்டை பயன்படுத்துகிறார்! ஹஹாஹா... இது ஒரு கனவு!!" என்று எழுதினார்.

இது தொடர்பாக சங்ககாரா கூறியதாவது:- எனது கிராமத்து கிரிக்கெட்டில், சஞ்சுவின் இரண்டு பேட்கள் என்னிடம் உள்ளன. ஏனெனில் அவர் தனது இரண்டு பேட்களை எனக்குக் மிகவும் அன்பாக கொடுத்தார். எனக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை. வீட்டில் பேட் எதுவும் இல்லை. மற்றப்படி ஒன்றும் இல்லை.

சாஹல், நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நீங்களும் எனக்கு சில கிட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காகவும் நான் காத்திருக்கிறேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com