தமிழக சட்டசபை தேர்தல் - 9 மணி வரை 13.80 சதவீத வாக்குப்பதிவு

காலை 9 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்
வாக்களிக்க வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்
Published on

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர்.

காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 20.23 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 9.98 சதவீத வாக்குகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார். மேலும், சென்னையில் 10.58 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com