வீடியோ: Tim டேவிட் அல்ல.. Swim டேவிட்.. ஸ்டேடியத்தில் நீந்தி விளையாடிய ஆர்சிபி வீரர்

சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. போர் பதற்றத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.
வீடியோ: Tim டேவிட் அல்ல.. Swim டேவிட்.. ஸ்டேடியத்தில் நீந்தி விளையாடிய ஆர்சிபி வீரர்
Published on

இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி உள்ளிட்டோர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் இணைந்தனர்.

இந்நிலையில் நேற்று பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சின்னசாமி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதனை பார்த்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட் மைதானத்தில் இறங்கி மழையில் ஆனந்த குழியல் போட்டார். மேலும் குழந்தையாக மாறிய அவர் மைதானத்தில் விரிந்திருந்த தார்பாயில் சறுக்கி விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com