தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி பறிமுதல் - தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு பேட்டி

தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.412 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கூறியுள்ளார்.
சத்யபிரதசாகு
சத்யபிரதசாகு
Published on

சென்னை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று இரவு 7 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது. அதன் பிறகு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும். பிரசாரங்கள் எதுவும் செய்யக்கூடாது.

தமிழகம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.412 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டையில் ஒரு வீட்டில் இருந்து ரூ.91.56 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் ரூ.1.3 கோடியும், பாளையங்கோட்டையில் ரூ.15 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com