இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் இன்று பிரசாரம் தொடக்கம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், தி.மு.க. கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
முத்தரசன்
முத்தரசன்
Published on

சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், தி.மு.க. கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இன்று அவர் கள்ளக்குறிச்சியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

நாளை (21-ந் தேதி) முதல் 23 தேதி வரை 3 நாட்கள் சென்னையில் அவர் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

24-ந் தேதி தஞ்சாவூர் தெற்கு மற்றும் கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். 25-ந் தேதி தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com