கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று காலை வாக்கிங் சென்றபடி கமல்ஹாசனுக்கு வாக்கு சேகரித்த நடிகை சுகாசினி
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று காலை வாக்கிங் சென்றபடி கமல்ஹாசனுக்கு வாக்கு சேகரித்த நடிகை சுகாசினி

வாக்கிங் சென்று கமல்ஹாசனுக்கு ஆதரவு திரட்டிய நடிகை சுஹாசினி

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனை ஆதரித்து அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி வாக்கிங் சென்று ஆதரவு திரட்டினார்.
Published on

கோவை:

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் கோவையிலேயே முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசனை ஆதரித்து அவரது அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மக்களை வீடு, வீடாக சென்று சந்தித்த அவர் தேர்தல் துண்டு பிரசுரங்களை வழங்கி டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

2-வது நாளாக இன்று காலை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடிகை சுஹாசினி நடைபயிற்சி மேற்கொண்டார். அவர் நடந்து வருவதை பார்த்ததும் மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். தொடர்ந்து அவரை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது அவர்களிடம் சுஹாசினி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசனுக்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டு கொண்டார்.

பொதுமக்கள் அவரிடம் உங்களுடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசை என்று கூறினர். அதற்கு அவர் எடுத்து கொள்ளலாம் என கூறவே மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், அங்கு நடைபயிற்சி சென்றவர்களிடம் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு திரட்டினார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு சென்ற சுஹாசினி அங்கு ஜூஸ் வாங்கி குடித்தார். சிறிது நேரம் அந்த கடையில் உள்ள ஊழியர்கள், அங்கு அமர்ந்திருந்த அனைவரிடமும் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள், அந்த பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் அமர்ந்திருந்த முதியவர்கள் ஆகியோரிடமும் கமல்ஹாசனை ஆதரிக்குமாறு கேட்டு கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com