டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்

எலிமினேட்டர் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் அடித்து அவுட்டானார். மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்
Published on

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் 25+ ரன்கள் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார். நடப்பு சீசனில் அவர் விளையாடிய 15 போட்டிகளிலும் 25+ ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com