ஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது - ரூ.42.87 லட்சம் பணம் பறிமுதல்

ஐதராபாத் நகரில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் ரூ.42.87 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். #IPL2018 #VIVOIPL #IPLbetting
ஐதராபாத்தில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது - ரூ.42.87 லட்சம் பணம் பறிமுதல்
Published on

ஐதராபாத்:

ஐ.பி.எல். 11-வது சீசன் போட்டிகள் கடந்த 7-ம் தேதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கி, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது. போலீசாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் ஐபிஎல் போட்டிகளை வைத்து கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இரண்டு இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அதில், இணையதளத்தை பயன்படுத்தி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ரூ. 42.87 லட்சம் பணம், 200 கிராம் தங்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் ஆறு பேர் மீதும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஐதராபாத் நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #VIVOIPL #IPLbetting

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com