வெற்றிக்கு பின்பு ஸ்ரேயஸ் உடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரீத்தி ஜிந்தா

மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
வெற்றிக்கு பின்பு ஸ்ரேயஸ் உடன் செல்பி எடுத்துக்கொண்ட பிரீத்தி ஜிந்தா
Published on

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஸ்ரேயஸ் உடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com