

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 197 இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான பிரப்சிம்ரன் சிங் 39 பந்தில 69 ரன்கள் விளாசினார். இதன்மூலம் இந்த தொடரில் 500 ரன்களை தாண்டினார். கடந்த சீசனிலும் 500 ரன்களை தாண்டி குவித்திருந்தார்.
இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாத (Uncapped) வீரர் இரண்டு ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர்கள் என்ற பெருமையை பிரப்சிம்ரன் சிங் பெற்றுள்ளார். 2025 சீசனில் 549 ரன்கள் அடித்திருந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்றைய போட்டிகளில் தோல்வியடைந்தால் பஞ்சாப் அணி பிளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6-ல் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டி மழையாமல் கைவிடப்பட்டது. இதனால் ஒரு புள்ளி கிடைத்துள்ளது.