அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ள பாலக்கோடு தொகுதி கண்ணோட்டம்

அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகன் தொடர்ந்து நான்கு முறை வெற்றியை ருசித்துள்ள நிலையில், ஐந்தாவது முறையாக களம் காண்கிறார்.
பாலக்கோடு தொகுதி
பாலக்கோடு தொகுதி
Published on

அதிமுக சார்பில் கே.பி. அன்பழகன், திமுக சார்பில் பி.கே. முருகன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ராஜசேகர், நாம் தமிழர் கட்சி சார்பிலா் கலைச்செல்வி, தேமுதிக சார்பில் விஜய சங்கர் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் கே.பி. அன்பழகன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 2,25,000

2. அசையும் சொத்து- ரூ. 64,71,739

3. அசையா சொத்து- ரூ. 1,49,00,000

திமுக சார்பில் பி.கே. முருகன் சொத்து மதிப்பு

1. கையிருப்பு- ரூ. 3,50,000

2. அசையும் சொத்து- ரூ. 16,82,484.41

3. அசையா சொத்து- ரூ. 50,00,000

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாதலங்களுள் ஒன்றாக விளங்கும் ஒகேனக்கல் அருவி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அமைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் பால், மாம்பழம், தக்காளி, தேங்காய் உற்பத்தியில் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி சிறந்து விளங்கி வருகிறது.

இதில் பாலக்கோடு ஒன்றியம் காரிமங்கலம் ஒன்றியம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மாரண்ட அள்ளி பேரூராட்சி, கரியமங்கலம் பேரூராட்சி, மற்றும் பாலக்கோடு பேரூராட்சி ஆகியவை உள்ளன.

வாக்காளர்கள்

பாலக்கோடு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 46 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 25 பேர் உள்ளனர். மற்றவர்கள் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 89 வாக்காளர்கள் உள்ளனர்.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் பஞ்சப்பள்ளி, சின்னாறு அணை, கேசர்குளி அணை, தும்பலஹள்ளி அணை 3 அணைகள் பிரதானமாக உள்ளது. இந்த நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் கரும்பு நெல் மாம்பழம், பூ, தக்காளி மற்றும் காய்கறி வகைகள் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய சந்தை வசதி இல்லாததால் வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலத்துக்கும் காய்கறி மற்றும் பூக்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பிரதானமாக உள்ள கரும்பு சாகுபடியில் தமிழகத்திலே அதிக அளவு சர்க்கரை உற்பத்தி பெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற்ற தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிய நிலையில் உள்ளது.

மேலும் போதிய நீர் பாசன திட்டங்கள் இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருவதாகவும் இந்த பகுதியில் பிரதானமாக உள்ள விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொகுதி மக்கள் அண்டை மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வன்னியர் இன சமூக மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி ஒன்று. பாலக்கோடு பகுதியில் வன்னியர், கொங்கு வெள்ளாள கவுண்டர், உடையார், ஆதி திராவிடர் மற்றும் தெலுங்கு செட்டியார் மக்கள் வசித்து வருகின்றனர். பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் வன்னியர் இன சமூக மக்களின் வாக்கு வங்கியே வெற்றி தோல்வியை நிர்ணயித்து வந்துள்ளது.

நிறைவேறாத கோரிக்கைகள் 

1.எண்ணேக்கொல் புதூர் கால்வாய் தும்பலஹள்ளி இணைப்பு திட்டம். 

2. அலியாளம் அணைக் கட்டு கால்வாய் தூள்செட்டி இணைப்பு திட்டம்.

3. காவேரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தேன்கனிக்கோட்டை வரை பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நீர் வழிபாதை திட்டம்.

4. தொல்லை காது தடுப்பணை திட்டம்,

5. சாஸ்திரமுட்லு தடுப்பணை திட்டம்,

6.சின்னாறு ஆற்று படுகையில் நீர்தேக்க திட்டம்,

7. அரசு தக்காளி மதிப்பு கூட்டப்பட்ட கூழ் தொழிற்சாலை, பூ மார்க்கெட், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் மார்க்கெட், உள்ளிட்ட வைகளுக்கு சில திட்டங்களுக்கு மட்டும் அடிக்கல் நாட்டப்பட்டு பல திட்ட பணிகள் இன்னும் கூட தொடங்கப்படாமல் உள்ளது.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் இருந்த போதும் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. 

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து கிராம பகுதிகளுக்கும் இணைக்கும் வகையில் முழுமையான வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பாலக் கோடு சட்டமன்றத் தொகுதியில் காரிமங்கலத்தில் மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாட்லாம்பட்டி சட்டக்கல்லூரி, 

பாலக்கோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், மகப்பேறு மருத்துவ மனை, மகளிர் காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம் மற்றும் கிராமப் பகுதிகளில் தார்சாலை வசதி, ஊராட்சிகளில் திருமண மண்டபம் உள்ளிட்டவை செய்யப் பட்டுள்ளது.

1967 கே.முருகேசன்- காங்கிரஸ்.

1971 எம்.வி.கரிவேங்கடம்- தி.மு.க.

1977 பி.எம்.கிருஷ்ணன்- அ.தி.மு.க.

1980 முனுசாமி- அ.தி.மு.க.

1984 தீர்த்தராமன்- காங்கிரஸ்.

1989 மாதப்பன் (அ.தி.மு.க.) (ஜெ.அணி).

1991 சேகர்- அ.தி.மு.க.

1996 வெங்கடாசாமி- தி.மு.க.

2001 கே.பி. அன்பழகன்- அ.தி.மு.க.

2006 கே.பி.அன்பழகன்- அ.தி.மு.க.

2011 கே.பி.அன்பழகன்- அ.தி.மு.க.

2016 கே.பி.அன்பழகன்- அ.தி.மு.க.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com