

ஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், லெவிசும் களமிறங்கினர்.
ஐதராபாத் அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் சிக்கி மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் லெவிஸ் 29 ரன்னும், சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
ஐதராபாத் அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.