ஐ.பி.எல். போட்டிக்காக தண்ணீர் வீணாக்கப்படுகிறதா? பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஐ.பி.எல். போட்டிக்காக தண்ணீர் வீணாக்கப்படுவது குறித்து மனுவிற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இந்திய கிரிக்கெட் வாரியம் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #IPLCricket #NGT
ஐ.பி.எல். போட்டிக்காக தண்ணீர் வீணாக்கப்படுகிறதா? பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Published on

டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. மொத்தம் 9 மாநிலங்களில், 51 இடங்களில் 60 ஆட்டங்கள் நடக்கிறது.

இதையொட்டி மைதானம் பராமரிப்பு, ஆடுகளம் (பிட்ச்) தயாரிப்பு உள்பட பல்வேறு பணிகளுக்காக பல லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் போது, தேவையில்லாமல் தண்ணீர் வீணாவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் குறையும். மேலும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையும் உருவாகும். எனவே வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த போட்டியை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com