

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.
இதில் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, அணி ஐதராபாத் அணி முதலில் களமிறங்குகிறது.