லக்னோ அணியின் மயங்க் யாதவ் விலகல்: மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் அறிவிப்பு

மயங்க் யாதவுக்கு பதிலாக நியூசிலாந்தின் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
லக்னோ அணியின் மயங்க் யாதவ் விலகல்: மாற்று வீரராக நியூசிலாந்து வீரர் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது.

மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையே, இந்த மாத இறுதியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியம் கொடுக்க வேண்டியுள்ளதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.

அவருக்கு பதிலாக நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் இன்னும் 13 லீக் ஆட்டம் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com