நெருக்கடியான நிலையில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியளிக்கும் என்கிறார் ராணா

நெருக்கடியான நிலையில் சிறப்பான பேட்டிங் மகிழ்ச்சியளிக்கிறது என்று 35 பந்தில் 59 ரன்கள் குவித்த நிதிஷ் ராணா கூறியுள்ளார். #KKRvDD #IPL2018
நெருக்கடியான நிலையில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியளிக்கும் என்கிறார் ராணா
Published on

எப்போதும் நெருக்கடியான நிலையில் பேட்டிங் செய்வது பிடிக்கும் என நிதிஷ் ராணா கூறியுள்ளார். இதுகுறித்து ராணா கூறுகையில் ‘‘நெருக்கடியான நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று எப்போதுமே நான் நினைப்பதுண்டு. இதுகுறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் நெருக்கடி இருந்தது. அந்த நெருக்கடிக்கு இடையே அனுபவித்து பேட்டிங் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு எங்களுக்கு இது முக்கியமான போட்டி.

டெல்லிக்கு எதிரான ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை கொடுத்தார்கள். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், ரிஷப் பந்த் மற்றும் மேக்ஸ்வெல் விக்கெடெ்டுக்களை குல்தீப் யாதவ் வீழ்த்தியது எங்களுக்கு முக்கியமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com