ஐபிஎல் போட்டிகளில் 13வது முறையாக 200 ரன்களை கடந்து ஆர்சிபி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் போட்டிகளில் 13 முறை 200 ரன்களுக்கும் அதிகமாக குவித்து சாதனை படைத்துள்ளது. #RoyalChallengersBangalore #IPL2018 #VIVOIPL
ஐபிஎல் போட்டிகளில் 13வது முறையாக 200 ரன்களை கடந்து ஆர்சிபி சாதனை
Published on

பெங்களூர்:

ஐபிஎல் தொடரின் 51-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. 

இப்போட்டியில், பெங்களூர் அணி புதிய சாதனையை படைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 13-வது முறையாக 200 ரன்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை பெங்களூர் அணி படைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையும் பெங்களூர் அணியிடமே உள்ளது. பெங்களூர் அணி, புனே அணிக்கு எதிராக எடுத்த 272 ரன்களே ஐபிஎல் போட்டிகளில் பதிவான அதிகபட்ச ஸ்கோராகும். 

பெங்களூர் அணியை தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி உள்ளது. சென்னை அணி 11 முறை 200 ரன்களை கடந்துள்ளது. அதில் இந்த சீசனில் 4 முறை 200 ரன்களை கடந்துள்ளது. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 9 முறை 200 ரன்களை கடந்து அந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. #RoyalChallengersBangalore #IPL2018 #VIVOIPL

X

Maalai Malar
www.maalaimalar.com