உலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்

இந்திய பிரீமியர் லீக் தொடரின் 2019 சீசனை மார்ச் மாதத்திலேயே தொடங்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. #IPL2018 #BCCI
உலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்
Published on

அடுத்த ஆண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.

ஐசிசி விதிமுறைப்படி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அணிகள் தயாராகிவிட வேண்டும். மேலும், லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி ஐபிஎல் தொடருக்கும் அதன்பின் இந்திய அணி விளையாடும் தொடருக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் மே 15-ந்தேதிக்கு முன் ஐபிஎல் தொடரை பிசிசிஐ முடித்தாக வேண்டும்.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே தலைவர்கள் பிரசாரம் என தேர்தல் களைகட்டும். இதனால் போலீஸ் தரப்பில் இருந்து எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அறிவித்துவிடும். 2009 மற்றும் 2014 சீசனில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. 2009-ல் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ல் பாதி தொடர் ஐக்கியர அரபு எமிரேட்ஸிலும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com