சர்ச்சையான அவுட்: இஷான் கிஷனை கடுமையாக விமர்சித்த சேவாக்

பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும்.இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சர்ச்சையான அவுட்: இஷான் கிஷனை கடுமையாக விமர்சித்த சேவாக்
Published on

ஐதராபாத்:

ஐதராபாத்தில் நேற்றிரவு நடத்திய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீபக் சாஹர் பந்து வீச்சில் இஷான் கிஷன் பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.

நடுவர் இஷான் கிஷன் வெளியேறியதையடுத்து யோசித்து கொண்டே அவுட் கொடுத்தார். ஆனால் இஷான் கிஷன் ரிவ்யூவும் கேட்காமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. களநடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.

இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை. நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது.

என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com