IPL 2025: ஐதராபாத் அபார வெற்றி - பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது லக்னோ

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
IPL 2025: ஐதராபாத் அபார வெற்றி - பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது லக்னோ
Published on

ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.

இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com