தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன்- அபிஷேக் சர்மா

நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர். ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன்- அபிஷேக் சர்மா
Published on

ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா கூறியாதவது:-

நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பானது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை விளையாடினேன். ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

அணிக்குள் அதிகம் ஆலோசனையில் ஈடுபடவில்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது. யுவராஜ் சிங்குக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவருடன் நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சூர்யகுமார் யாதவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com