

நடப்பு ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியின் 14வது ஓவரை சாய் கிஷோர் வீசினார். அப்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கும் சாய் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பிட்ச்சிற்கு இடையே வந்து முறைத்து கொண்டனர். உடனே நடுவர் குறுக்கிட்டு 2 வீரர்களையும் பிரித்தார். பின்பு பாண்ட்யா போ என்பது போல சைகை செய்தார்.
பின்னர் போட்டி முடிந்ததும் மோதலை மறந்துவிட்டு சாய் கிஷோரை ஹர்திக் பாண்ட்யா கட்டியணித்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.
Hardik Pandya hugging Sai Kishore after the match - A lovely moment ? pic.twitter.com/uRUy20InDE