மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்

முதலில் ஆடிய உ.பி. வாரிர்யஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்சை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்
Published on

வதோதரா:

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.

கேப்டன் தீப்தி சர்மா 39 ரன்னும், உமா சேத்ரி 24 ரன்னும் எடுத்தனர்.

குஜராத் சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கெட்டும், டாடின், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் களமிறங்கியது. கேப்டன் ஆஷ்லீ கார்ட்னர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.

ஹர்லீன் தியோல், டாடின் ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிபெற வைத்தது.

இறுதியில், குஜராத் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்லீன் தியோல் 34 ரன்னும், டாடின் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com