தோனியால் முடியாது.. சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஓபன் டாக்

அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை.அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது.
தோனியால் முடியாது.. சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் ஓபன் டாக்
Published on

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

சென்னை அணியின் பினிஷராக செயல்படும் தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-ம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-

அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.

இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.

நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார்.

என்று பிளெமிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com