நூர் அகமது அபாரம்: மும்பையை 155 ரன்களில் கட்டுப்படுத்தியது சென்னை

டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
நூர் அகமது அபாரம்: மும்பையை 155 ரன்களில் கட்டுப்படுத்தியது சென்னை
Published on

சென்னை:

ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டக் அவுட்டானார். ரியான் ரிக்கல்டன் 13 ரன்னும், வில் ஜாக்ஸ் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை அணி 36 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ்-திலக் வர்மா ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி 51 ரன் சேர்த்தது. சூர்யகுமார் 29 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 31 ரன்னில் வெளியேறினார். இருவரையும் நூர் அகமது அவுட்டாக்கினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

கடைசி கட்டத்தில் தீபக் சஹர் 28 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி சார்பில் நூர் அகமது 4 விக்கெட்டும், கலீல் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com