குஜராத் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத ஆஷிஷ் நெஹ்ராவின் குழந்தைகள்

எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினகுஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.
குஜராத் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுத ஆஷிஷ் நெஹ்ராவின் குழந்தைகள்
Published on

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. சண்டிகரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது.

எலிமினேட்டர் சுற்றில் குஜராத் அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் குழந்தைகள் மனமுடைந்து அழுதனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com