

அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக சார்பில் மொஞ்சனூர் ஆர். இளங்கோ, மக்கள் நீதி மய்யம் முகமது அனீப் சாகில், தமிழர் கட்சி சார்பில் அனிஷா பர்வீன், அமமுக சார்பில் பி.எஸ்.என். தங்கேல் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா வேட்பாளர் அண்ணாமலை சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,00,000
2. அசையும் சொத்து- ரூ. 46,13,849
3. அசையா சொத்து- ரூ, 1,00,00,000
திமுக வேட்பாளர் இளங்கோ சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 6,78,000
2. அசையும் சொத்து- ரூ. 38,31,685.90
3. அசையா சொத்து- ரூ, 2,28,00,000
தமிழகத்தில் அதிக அளவில் முருங்கை விளைச்சல் கொண்ட பகுதியாக அடையாளம் காணப்படுவது கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி. இந்த தொகுதியானது 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பெரிய பரப்பளவு கொண்ட தொகுதியாகவும் உள்ளது.
2016-ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடந்த போது இத்தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிகம் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக இத்தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்து பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை சட்டமன்றத்தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்ததால் பதவி இழந்த சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அரவக்குறிச்சி தொகுதியின் செந்தில் பாலாஜி.
இவர் 19.5.2019 அன்று நடைபெற்ற இத்தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக களம் இறங்கி வெற்றி பெற்றார். தினந்தோறும் காலை வேளைகளில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் படையெடுப்பதை பார்ப்பது மிகவும் இயல்பானதொரு காட்சியாகும்.
காரணம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிலுமே அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகள் பின்தங்கியே உள்ளன.
உயர்கல்வி படிக்கவும், தொழில்நிறுவனங்களில் வேலை செய்யவும் இப்பகுதியை சார்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான கரூர் அருகில் உள்ள பகுதிகளுக்கோ அல்லது அண்டை மாவட்டமான திருப்பூரில் உள்ள பகுதிகளுக்குதான் செல்ல வேண்டிய நிலையில் அரவக்குறிச்சி தொகுதி மக்கள் உள்ளனர்.
அரவக்குறிச்சி தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமான அமராவதி. இந்த ஆற்றில் மணல் திருட்டால் கடும் சிதைவுக்கு உள்ளாகி உள்ளதால் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு தேவைகளுக்கும் பெரும் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
மேலும் திருப்பூர் பகுதிகளில் முறைகேடாக சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் அற்றில் கலக்கப்படுவதால், அந்த நச்சுக் கலந்த நீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்ட்டு அதன் உப் புத்தன்மையும் அதிகரித்து வேளாண்மைக்கு ஏற்புடையது அல்லாமல் மாறியுள்ளது.
தொகுதிக்குள்ளும், அண்மையிலும் சேர்த்து 3 ஆறுகள், அவற்றின் வாய்க்கால்கள் என இருந்தும் நீர் நெருக்கடியில் சிக்கியுள்ளது அரவக்குறிச்சி.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை நெல், வாழை, சிறு தானியங்கள் என பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வந்த அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது தண்ணீர் தேவை குறைவாக உள்ள கலப்பு பயிரான செடி முருங்கைக்கு மாறியுள்ளனர்.
முருங்கையிலிருந்து மதிப்புக் சூட்டுப் பொருட்களைத் தயாரிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இப்பகுதிகளில் கணிசமாக உள்ளன.
நலிந்து வரும் விசைத்தறி தொழிலிருந்து ஏற்கனவே வேலை செய்துவந்த தொழிலாளர்கள் வெளியேறி வரும் சூழல்நிலையில் வேளாண் தொழிலில் இருந்து வெளியேறிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பக்கத்து ஊர்களுக்குப் பயணித்து பஞ்சாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது.
இத்தொகுதியில் மொத்தம் 2,13,110 வாக்காளர்கள் உள்ளனர். அரவக்குறிச்சி வட்டம், மண்மங்கலம் வட்டத்தின் சில பகுதிகள், அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியங்கள், தாந்தோணி ஒன்றியத்தின் சில பகுதிகள், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பள்ளப்பட்டி, சேவல் கட்டுக்கு பெயர் போன பூலாம் வலசு, புகழ்பெற்ற ரங்கமலை, புஞ்சை புகழூர், புஞ்சை தோட்டக் குறிச்சி, காகிதபுரம் பேரூராட்சிகளை உள்ளடக்கியது.
காங்கிரஸ், சுதந்திர கட்சி, முஸ்லிம் லீக் என தொகுதியில் வெற்றி பெற்று வந்த நிலையில் 1980-ம் ஆண்டு முதல் திராவிட கட்சிகள் அரவக்குறிச்சி தொகுதியில் காலூன்ற தொடங்கின. தற்போது வரை இந்த தொகுதியை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது.ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் கட்சியினர் தங்கள் பங்கிற்கு கொடுக்கும் வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்துள்ளதாகவும், இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் முழுமையாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்து தொகுதி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
தி.மு.க. 5 முறை, அ.தி.மு.க. 5 முறை, காங் கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும், சுதந்திர கட்சி ஒரு முறையும், முஸ்லிம் லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றி
1952 ரத்தினகவுண்டர் (சுயேட்சை)
1957 சதாசிவம் (காங்கிரஸ்)
1962 சதாசிவம் (காங்கிரஸ்)
1967 எஸ்.கே.கவுண்டர் (சுதந்திர கட்சி)
1971 அப்துல் ஜாபர் (முஸ்லிம் லீக்)
1977 சதாசிவம் (காங்கிரஸ்)
1980 கந்தசாமி (அ.தி.மு.க.)
1984 ஜெகதீசன் (அ.தி.மு.க.)
1989 ராமசாமி (தி.மு.க.)
1991 மரியா முல்லாசியா (அ.தி.மு.க.)
1996 முகமது இஸ்மாயில் (தி.மு.க.)
2001 லியாதீன் சையத் (அ.தி.மு.க.)
2006 ரகுமான் (தி.மு.க.)
2011 கே.சி.பழனிசரி (தி.மு.க.)
2016 செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.)
2019 செந்தில்பாலாஜி (தி.மு.க.) இடைத்தேர்தல்
2016 தேர்தல்
செந்தில்பாலாஜி (அ.தி.மு.க. வெற்றி)- 88068
கே.சி.பழனிசாமி (தி.மு.க.)- 64407
பிரபு (பா.ஜ.க.)- 3162
தே.மு.தி.க.- 1513
ஈஸ்வரன் (பா.ம.க.)- 995
நாம் தமிழர் கட்சி- 793
சிவக்குமார் (சுயேட்சை)- 474
மணி (சுயேட்சை)- 443
கிருஷ்ணமூர்த்தி (சுயேட்சை)- 284
மணிகண்டன் (சுயேட்சை)- 267
சிவசண்முகம் (சுயேட்சை)- 168
தங்கபாண்டி (சுயேட்சை)- 156
மகுடீஸ்வரன் (சுயேட்சை)- 154
கார்த்திகேயன் (சுயேட்சை)- 106
மணிவண்ணன் (சுயேட்சை)- 99