ஐ.பி.எல் - டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறதுகுஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்
ஐ.பி.எல்  - டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
Published on

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com