மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடங்கியது ஐபிஎல் இறுதிப் போட்டி.. சிஎஸ்கே பந்துவீச்சு தேர்வு

கனமழை தொடர்ந்து பெய்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.இன்று வானிலை சீராக இருந்ததால் மாலை 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது.
மழை அச்சுறுத்தலுக்கு மத்தியில் தொடங்கியது ஐபிஎல் இறுதிப் போட்டி.. சிஎஸ்கே பந்துவீச்சு தேர்வு
Published on

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது.

இன்றும் மழைக்கான அறிகுறிகள் இருந்ததால் போட்டி பாதிக்கப்படும் சூழல் இருந்தது. அகமதாபாத்தற்கு மேற்கே மழை பெய்தது. ஆனால் பிற்பகலுக்கு பிறகு வானம் ஓரளவு தெளிவாக காணப்பட்டது. இதனால் சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாசில் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக விர்திமான் சகா, ஷுப்மன் கில் களமிறங்கினர். மழை குறுக்கிட்டால் ஓவர்கள் குறைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com